திருக்குறள்

திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய் களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய்யும் ஒரே வழி சித்தர்கள் காட்டிய யோக முறைகள் தான் .

இந்த யோக முறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

அனைவருக்கும் இனிய வணக்கம்

வாசியின் நிலை அறிய சிவசித்தனின் வாசி யோகா கலையை கற்றுக்கொள்.

இதை வாசிக்கும் போது நான் என் மனதில் உண்மையானவன். ஒரு செய்தி உண்மையான செய்தியாக இருந்தால் அதை உலகம் முழுவதும் பரப்ப நான் பாடுபடுவேன். ஒரு குடும்பம் என்னால் நலமுடன் வாழ்கிறது என்றால் அது சந்தோசமா? இல்லை 5000 குடும்பங்கள் மேலாக நலமுடன் வாழ்கிறது என்றால் அது சந்தோசமா? அதற்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் ....அதை தான் செய்கிறேன் ... உலகில் என்னை படைத்த இறைவனுக்கு என் நன்றி .என்ன செயல் வியப்பு அடைய வைக்கும் ... உண்மை தான் ... மற்றவர்கள் ஏன் செய்யவில்லை... உண்மை என்னிடம் இருக்கிறது . இறைவனும் என்னிடம் இருக்கிறான் ... என்னால் பல குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலை என்னிடம் இருக்கிறது.. உண்மை அறிந்தபின் இதை பரப்புங்கள் ...

யோகா செய்யுங்கள் !

நோய்கள் இல்லா வாழ்க்கை வாழ யோகா செய்யுங்கள் ! பலரும் யோகா செய்து நலமுடன் வாழ்ந்து வருகின்றனர் . அவர்களை பற்றி தமிழ் யோகாவில் வருகிறது. ஆண்கள் பெண்கள் யோகா செய்த அனுபவம் அதன் மூலம் நோய்கள் குணமடைந்த விவரம் இடம் பெற்று உள்ளது . உலக மக்கள் அனைவரும் யோகா கற்று உங்கள் வாழ்வை வளமாக்குங்கள் ..... நன்றி

ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2

திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

Thursday, November 11, 2010

விண்டோஸ் 8

2012ல் விண்டோஸ் 8
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் என உத்தேசமாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.



இதுவரை வெளியான இயக்கத் தொகுப்புகளில், மிக வேகமாக விற்பனையாகும் தொகுப்பு என்ற பெயரைப் பெற்ற விண்டோஸ் 7 தொகுப்பு வெளியாகி ஓராண்டு ஆனதற்கான வெற்றி குறித்து தகவல் தருகையில், விண்டோஸ் 8 குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. http://www.winrumors.com/microsoft-windows-8-about-two-years-away/ என்ற தளத்தில் இந்த செய்தி காணப்பட்டது. ஆனால் சில நாட்களில் இந்த செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.



மேற்கொண்டு எந்த செய்தியையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், 128 பிட் அமைப்பில் இயங்கும் சிஸ்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாகப் பல நாட்களுக்கு முன்பே பேசப்பட்டது. அநேகமாக, இதுவே விண்டோஸ் 8 ஆக இருக்கலாம். இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தன் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் மொபைல் ஐ.ஓ.எஸ். ஆகியவற்றை இணைத்து ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஒன்றைத் தர இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. இதனைக் கேள்விப்பட்ட மைக்ரோசாப்ட், நிச்சயமாய் அதனை உணர்ந்து, வரப்போகும் தன் அடுத்த சிஸ்டத்தையும் அதற்கேற்ற வகையில் தயாரிக்க விரும்பலாம்.

வான்வெளியில் கண்டுபிடிப்பு

20 மடங்கு அதிக நட்சத்திரங்கள்
ண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது.



அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை தெரிவித்திருந்தனர். ஆனால், யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர் பீட்டர் வான் டோக்கும் தலைமையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி சார்லி கான்ராய் இணைந்து நட்சத்திர கூட்டங்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். பால்வெளி பாதையில் நட்சத்திர கூட்டங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ படம் எடுத்து 2006ல் வெளியிட்டிருந்தது.



அதன் அடிப்படையில் பிரகாசமான நட்சத்திரங்கள் எண்ணிக்கையை வைத்து நட்சத்திர தொகுப்புகளை பீட்டர் தலைமையிலான குழு ஆராய்ந்தது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்ற கணக்கை அது தவிடுபொடியாக்கியது. அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.



அதாவது, 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் வரக்கூடிய எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உலவிக் கொண்டிருப்பதாக பீட்டர் தெரிவித்துள்ளார். இதை ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ்டிலியன் என்று கூறுகின்றனர். அதாவது, 10,000 கோடியில் 3 லட்சம் மடங்குகள் செக்ஸ்டிலியன் என்று அழைக்கப்படுகிறது.

நாடுகளின் வருகை ...


Followers

Share it

 
Design by Vilvam Yoga | Bloggerized by SHREE VILVAM | Yogaa