Pages

Thursday, November 11, 2010

விண்டோஸ் 8

2012ல் விண்டோஸ் 8
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் என உத்தேசமாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.



இதுவரை வெளியான இயக்கத் தொகுப்புகளில், மிக வேகமாக விற்பனையாகும் தொகுப்பு என்ற பெயரைப் பெற்ற விண்டோஸ் 7 தொகுப்பு வெளியாகி ஓராண்டு ஆனதற்கான வெற்றி குறித்து தகவல் தருகையில், விண்டோஸ் 8 குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. http://www.winrumors.com/microsoft-windows-8-about-two-years-away/ என்ற தளத்தில் இந்த செய்தி காணப்பட்டது. ஆனால் சில நாட்களில் இந்த செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.



மேற்கொண்டு எந்த செய்தியையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், 128 பிட் அமைப்பில் இயங்கும் சிஸ்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாகப் பல நாட்களுக்கு முன்பே பேசப்பட்டது. அநேகமாக, இதுவே விண்டோஸ் 8 ஆக இருக்கலாம். இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தன் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் மொபைல் ஐ.ஓ.எஸ். ஆகியவற்றை இணைத்து ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஒன்றைத் தர இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. இதனைக் கேள்விப்பட்ட மைக்ரோசாப்ட், நிச்சயமாய் அதனை உணர்ந்து, வரப்போகும் தன் அடுத்த சிஸ்டத்தையும் அதற்கேற்ற வகையில் தயாரிக்க விரும்பலாம்.

வான்வெளியில் கண்டுபிடிப்பு

20 மடங்கு அதிக நட்சத்திரங்கள்
ண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது.



அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை தெரிவித்திருந்தனர். ஆனால், யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர் பீட்டர் வான் டோக்கும் தலைமையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி சார்லி கான்ராய் இணைந்து நட்சத்திர கூட்டங்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். பால்வெளி பாதையில் நட்சத்திர கூட்டங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ படம் எடுத்து 2006ல் வெளியிட்டிருந்தது.



அதன் அடிப்படையில் பிரகாசமான நட்சத்திரங்கள் எண்ணிக்கையை வைத்து நட்சத்திர தொகுப்புகளை பீட்டர் தலைமையிலான குழு ஆராய்ந்தது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்ற கணக்கை அது தவிடுபொடியாக்கியது. அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.



அதாவது, 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் வரக்கூடிய எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உலவிக் கொண்டிருப்பதாக பீட்டர் தெரிவித்துள்ளார். இதை ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ்டிலியன் என்று கூறுகின்றனர். அதாவது, 10,000 கோடியில் 3 லட்சம் மடங்குகள் செக்ஸ்டிலியன் என்று அழைக்கப்படுகிறது.

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2