மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?
பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும்.
பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனாலினால் விஷ தன்மையை முறித்துவிடும். கிழகத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷ பாம்பு ஒயின் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது. இதில் இரண்டு வகையான விஷ பாம்பு ஒயின் உள்ளது.
ஓன்று உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது பாட்டிலினுள் விஷ பாம்புகள் உயிருடன் அடைக்கபட்டு அதன் உடல் சாறாக பிழியபட்டு உடனடியாக அருந்துவது. இரண்டாவது முறையானது மது பாட்டிலினுள் விஷ பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டு பலமாதங்கள் கழித்து குடிப்பது.
Sunday, August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment