பூமியை வெப்பம் தாக்கும் அபாயம்!
சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது.
அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.
பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.
பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்நிலையில் ஆக.1ஆம் தேதி காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.
இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இதை கணக்கிட்டு பார்த்தால் இன்று இந்த வெப்பம் பூமியை தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். இதனால் பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கி ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.
இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன.
வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை சூரிய சுனாமி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்தசுனாமி பூமியை தாக்குமா? இல்லையா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும். பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது. செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.
Thursday, August 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment