20 மடங்கு அதிகரிக்கும் சிப்
நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் புதிய "சிப்" ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும்.
பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ "சிப்"பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில "சிப்"களில் 16 பாகங்கள் வரை இருக்கும். இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ "சிப்"பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும்.
இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Monday, January 10, 2011
20 மடங்கு அதிகரிக்கும் சிப்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment