Pages

Tuesday, October 26, 2010

நிலா

ந‌ம்முடைய பூ‌மி‌க்கு ஒரே ஒரு ‌நிலா உ‌ள்ளது. இதை‌ப் போலவே ம‌ற்ற ‌கிரக‌ங்களு‌க்கு ‌நிறைய ‌நிலா‌க்க‌ள் உ‌ள்ளன. ச‌னி ‌கிரக‌த்‌தி‌ற்கு ம‌‌ட்டு‌ம் 61 ‌நிலா‌க்க‌ள் உ‌ள்ளன. இதை‌த் த‌விர சுமா‌ர் 200 ‌நிலவு‌க்கு‌ட்டிக‌ள் உ‌ள்ளன. இ‌ந்த 61 ‌நிலா‌வி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய ‌நிலவான டை‌ட்டனை ஆரா‌ய்வ‌தி‌ல் த‌ற்போது ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த டை‌ட்ட‌ன் நமது பூ‌மி‌யி‌ன் த‌ன்மையை ஒ‌த்‌திரு‌க்‌கிறதா‌ம். பூ‌மி எ‌ன்றால‌், பூ‌மி சுமா‌ர் 450 கோடி ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு எ‌ந்த த‌ன்மை‌யி‌ல் இரு‌ந்ததோ அ‌ந்த த‌ன்மை‌யி‌ல் தா‌ன் த‌ற்போது ‌டை‌ட்ட‌ன் உ‌ள்ளது.



டை‌ட்ட‌ன் எ‌ன்பது புத‌ன் கோளை ‌விடவு‌ம் பெ‌ரியது. சூ‌ரிய ம‌ண்டல‌த்‌திலேய ‌மிக‌ப்பெ‌ரிய ‌நிலவான ‌வியாழ‌னி‌ன் ‌நிலவான கா‌னி‌மீடு‌க்கு அடு‌த்ததாக இ‌ந்த டை‌ட்ட‌ன் உ‌ள்ளது. பூ‌மியை சுமா‌ர் 450 கோடி ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு பா‌ர்‌த்‌திரு‌ந்தா‌ல் எ‌வ்வாறு இரு‌ந்‌திரு‌க்குமோ அ‌ப்படியே உ‌ள்ளது இ‌ந்த ‌நிலாவு‌ம் எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். எனவே இ‌ந்த டை‌ட்டனை தொட‌ர்‌ந்து ஆ‌ய்வு செ‌ய்து வ‌ந்தா‌ல், ‌உ‌யி‌ரின‌ங்க‌ள் எ‌வ்வாறு தோ‌ன்‌றி‌யிரு‌க்கு‌ம் எ‌ன்று க‌ண்ட‌றிய முடியு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.



எனவே டை‌ட்டனை ஆராயு‌ம் ‌விதமாக கா‌சி‌னி எ‌ன்ற ஆ‌ய்வு‌‌க்கல‌‌த்‌தி‌‌ன் மூல‌ம் ஹைஜெ‌ன்‌ஸ் கல‌‌த்தை ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் அனு‌ப்‌பின‌ர். ஹைஜெ‌ன்‌ஸ் செ‌ய்த ஆ‌ய்‌வி‌ன்படி, டை‌ட்ட‌னி‌ல், ப‌னி‌ப்பாறைக‌ள், கட‌ற்கரை, கா‌ல்வா‌ய்க‌ள் போ‌ன்று ‌நீ‌ர்‌நிலைக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன எ‌ன்று உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. சூ‌ரிய‌க் குடு‌ம்ப‌த்‌தி‌ல் பூ‌மியை‌ப் போ‌ன்று மேக‌ங்க‌ள் ம‌ற்று‌ம் இரசாயன ‌நிலைகளை‌க் கொ‌ண்ட இதுவரை அ‌றிய‌ப்ப‌ட்ட இடமாக டை‌ட்ட‌ன் கருத‌ப்படு‌கிறது. ஆனா‌ல் டை‌ட்ட‌னி‌ன் கா‌ற்று ம‌ண்டல‌ம் ‌மிகவு‌ம் அட‌ர்‌த்‌தியாக இரு‌ப்பதையு‌ம் ஹைஜெ‌ன்‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.



மேலு‌ம், ஹைஜெ‌ன்‌ஸ் செ‌ய்த ஆ‌‌ய்‌வி‌ன்படி, டை‌ட்ட‌னி‌ல் இரு‌க்கு‌ம் கா‌ற்று ஆர‌ஞ்சு ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்க‌க் கூடு‌ம் எ‌ன்று‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். கா‌ற்று‌க்கு ‌நிற‌மி‌ல்லாததா‌ல்தா‌‌ன் ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை து‌ல்‌லியமாக நா‌ம் மே‌ற்கொ‌ள்‌கிறோ‌ம். டை‌ட்ட‌னி‌ல் இரு‌க்கு‌ம் அட‌ர்‌த்‌தியான கா‌ற்‌றினா‌ல், ஹைஜெ‌ன்‌ஸ் எடு‌த்த புகை‌ப்பட‌ங்க‌ளி‌ல், தரை‌ப்பகு‌தி‌யி‌ல் எ‌ன்ன இரு‌‌க்‌கிறது எ‌ன்பதை து‌ல்‌லியமாக அ‌றிய முடிய‌வி‌ல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.

Thursday, October 21, 2010

Google Scribe

Google Scribe

இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs.com.

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்.

அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.

இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவுகளுக்கும் சொற்கள் கிடைக்கின்றன.

அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.

Sunday, October 17, 2010

தமிழ் படிக்க....

உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்றுக்கொள்ள, அமெரிக்க விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.7 வயது முதல் 18 வயது வரையானவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த ஆன் லைன் வகுப்பில் சேரலாம். வாரம் ஒருமுறை இந்த வகுப்புகள் ந‌டைபெறும்; வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.இந்த நாளில் ஏதாவது ஒரு நாளை‌த் தேர்வு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலமாக இல்லாமல் நேரிடையாக கலந்துரையாடல் முறையில் இது நடத்தப்படுகிறது. அமெரிக்க நேரப்படி மாலை 07:30, இரவு 08:30, 09:30 மற்றும் 10:30 மணிக்கு இந்த வகுப்புகள் துவங்கும். ஆடியோ, வீடியோ, உரையாடல் மற்றும் பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் வழங்கப்படும். இன்டர்நெட் இணைப்பு, மைக் மற்றும் வெப் காமிரா வசதி செய்து கொள்ள வேண்டும். அனுபவம் உள்ள தமிழ் ஆசிரியர்களால் இது நடத்தப்படுகிறது. இந்த வசதியைப் பெற

www.Go4Guru.com

புதிய வசதி

இன்றைய காலகட்டத்தில் ஸ்கைப்பானது இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான் மென்பொருளாக காணப்படுகிறது.குறிப்பாக இலவசமாக உறவினர் நண்பர்களுடன் தொலைபேசி செலவு இல்லாமல் குரல்வழி உரையாடலை இவ் மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடிகின்றமையேயாகும்.ஸ்கை தற்பொழுது மேலும் பல வசதிகளை பாவனையாளர்களான எமக்கு அளித்துள்ளது.அது என்னவென்றால் ஸ்கைப்பில் இருந்தவாரே பேஸ்புக்குடன் தொடர்பை ஏற்படுத்துவது.அதாவது ஸ்கைப்பில் இருந்தவாரே ஸ்டேட்ஸ் அப்டேட்டிங் மற்றும் கமெண்டஸ் பண்ண கூடிய வசதியேயாகும்.தொகுப்பு 5.0 டவுண்லோட்

இணைய தேடல்

இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

Thursday, September 09, 2010

இளமை காக்கும் இளநீர்...

காலையும் மதியமும் இளநீர் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி சக்தியுடன் செயலாற்றலாம். கல்லீரலைப் பாதுகாத்து நன்கு இயங்கவும் இதில் உள்ள ஸல்ஃபர் உப்பு உதவுகிறது. இதில் ஸல்ஃபர் உப்பு தாராளமாக இருப்பதால் இரத்தம் சுத்தமாவதுடன் தோலையும் சிவப்பாகவும் மாற்றிவிடுகிறது .



தான் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் கொண்டவர்கள், தினமும் இரண்டு இளநீரும், 200 மிலி தக்காளிச் சாறும் ஒருவேளை அருந்தி வந்தால் நிச்சயம் சிவப்பாக மாறிவிடுவர். தக்காளியில் உள்ள லைகோபென், தோல் சிவப்பாக மாறுவதைத் துரிதப்படுத்தும்.



எனவே, கறுப்பாக உள்ளவர்கள் சிவப்பாக மாறுவது எளிதே. எல்லாவற்றையும் விட, காலையில் அருந்தும் இளநீர் சிறுநீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சியம் சேமிப்பையும் மற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. இரத்தக்கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிமிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன.



இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகிறோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுக்கிறது. முதுமையிலும், இளமையான தோற்றத்தை நீடிக்கச் செய்ய இப்போது முதலே தினமும் இரண்டு இளநீரை அருந்தி வாருங்கள். இதனால் மருத்துவச் செலவுகளும் மிச்சப்பட்டு, ஆரோக்கியமான வாழ்வும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள் !

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.




விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. “வைஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், “வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்’ என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது.



11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. “வைஸ்’ தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை. “வைஸ்’ தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது.



இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, “வைஸ்’ ஆய்வு செய்துள்ளது.



இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, “வைஸ்’ கண்டுபிடித்துள்ளது. சாதாரண தொலைநோக்கியை விட, “வைஸ்’ தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.



கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், “வைஸ்’ தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது. “விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும்.



ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், “வைஸ்’ விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!’ என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி.



“பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!’ என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.

Saturday, September 04, 2010

இருபது வயதினருக்கும்… கிட்னி ஸ்டோன் பிரச்னை

உணவை மாற்றினால் தப்பலாம்

இருபது வயதினருக்கும்… கிட்னி ஸ்டோன் பிரச்னை உணவை மாற்றினால் தப்பலாம் அறுபது வயதினருக்கு ஏற்படும் பல உடல் கோளாறுகள் இப்போது, இருபது வயதினருக்கு கூட வருகிறது. காரணம், உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் தான்.

பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் புட் பழக்கம் தான் இதற்கு காரணம். இந்த வகையில், நாற்பது வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த “கிட்னி ஸ்டோன்’பிரச்னை, இருபது வயதினருக்கு சகஜமாக வருகிறது. ஒபிசிட்டி, அதிக உப்பு, காரமுள்ள உணவு வகைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவை தான் காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

கிட்னி ஸ்டோன் என்பது, ஆண்களுக்கு தான் வரும்; பெண் களுக்கு மிக அரிது; ஆனால், சமீப காலத்தில், 20 -30 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. வருவது ஏன் கிட்னியில் கற்கள் சேர்ந்து தொந்தரவு செய்ய காரணம் பல இருந்தாலும், அது ஏற்படுவதற்கு காரணம், சிறுநீர் போகும் போது, அதில் உள்ள துகள்கள், திடமாகி கற்களாக மாறுகிறது. இதில் 75 சதவீத கற்கள், கால்சியம் மற்றும் ஆக் சலேட் தொடர்பான கற்கள் தான்.

உப்பு சார்ந்த உணவுகளால் சிறுநீரில் உள்ள உப்புச்சத்துக்கள், கற் களாகின்றன. அதுபோல உணவுகளில் உள்ள கழிவுகளில் ஆக்சலேட் என்ற கழிவு பிரிகிறது. அதுவும் கால்சியத்துடன் சேர்ந்து கற்களை உருவாக்குகிறது. இரண்டும் சிறுநீருடன் வெளியேறாமல் திடமாகி விடுகின்றன. இது தவிர, கால்சியம் பாஸ் பேட் கற்களும் சேர்கின்றன.

சில சமயம், சிறுநீரில் உள்ள அமிலச்சத்து, திடமாகி கற்களாகின்றன. இப்படி பலவகையில் கற்கள் ஏற்படுகின்றன. ஆரம்பம் எப்படி சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணம், போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் என்று முன்பு சொல்வதுண்டு. உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை. அது வறண்டுபோகக்கூடாது. அதனால், நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர்.

தண்ணீராகவோ, பழ ரசமாகவோ , திரவ உணவாகவோ உடலுக்குள் போக வேண்டும். அப் போது தான் இப்படிப்பட்ட சிறுநீரக கற்கள் சேராது. உப்பு சார்ந்த பிஸ்கட், உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்த பிரச்னை எளிதில் ஏற்படும்.அதனால், உணவிலும் உப்பைக் குறைப்பது மிக நல்லது. இதுபோல, அதிக சர்க்கரையும் ருசிக்கக்கூடாது.

என்ன சாப்பிடலாம்

கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீரும், ஜூஸ் களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. உடல் வற்றிப் போகக் கூடாது என்பதற்கு இந்த இரண்டும் முக்கியம். ஆனால், இளம் வயதினருக்கு இரண்டுமே எதிரிகள். டப்பாவிலும், பாட்டிலிலும் அடைக்கப்பட்ட கோலா ஜூஸ்கள் தான் பிடித்தமானது;

அதுபோல, பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் சாப்பிடுவதில் தான் அதிக அக்கறை டீன் ஏஜினருக்கு.அதை மாற்றி, காய்கறி மற்றும் புரூட் சாலட்களை சாப்பிடலாம்; தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், தோலிலும் பளபளப்பு அதிகரிக்கும்.

கால்சியம் குறைக்கலாமா

கிட்னி ஸ்டோனில் கால்சியம் கற்கள் தானே இருக்கிறது; அதனால், கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடலாம்; பால் போன்ற பொருட்களை விட்டுவிடலாம் என்று சிலர் தவறான யோசனை சொல்வர். அது தவறு. கால்சியம் கற்கள் என்பதால், அது தொடர் பான உணவுகளை கைவிட்டுவிட்டால் வேறு வகையில் பாதிப்பு வரும். கால்சியம் மாத்திரைகளை விழுங்குவோர் மட்டும், அதை தவிர்க்கலாம். இதற்கு டாக்டரின் யோசனை கேட்க வேண்டும்.

சிகிச்சை என்ன

சிறுநீரக கற்கள் என்பது சிலருக்கு சிறிய அளவில் இருக்கும். அவற்றை சில பயிற்சிகள், மருந் தால் சரி செய்து விட முடியும். சிலருக்கு பெரிதாக இருக்கும். அதை அகற்ற அறுவை சிகிச் சை தான் ஒரே வழி. இப் போது இந்த வகை கோளாறுகளை சரி செய்ய நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன. ஒலியை கிளப்பிக்கூட கற்களை கரையச்செய்யும் “லித் தோட்ரிப்சி’ முறையும் உள்ளது. லேசர் கருவி மூலமும் கற்களை கரைக்கலாம். ஆனால், இவற்றால், சிறுநீரக திசுக்கள் பாதிக்கப்படாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். சிலருக்கு “கோல்ப்’ பந்து அளவுக்கு கூட சிறுநீரக கல் இருக்கலாம். அதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.

ஒபிசிட்டி உள்ளவர்கள்…

சிறுநீரக கற்கள் யாருக்கு வரும் என்றெல்லாம் சரியாக சொல்ல முடியாது; இருபது வயதை தாண்டியவர்களுக்கும் வருவதால், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும். குண்டாக (ஒபிசிட்டி) இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியாக சிறுநீர் போகாமல் இருந்தால், டாக்டரிடம் காட்டலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இதெல் லாம் வராமல் பார்த்துக்கொள்ள உணவு முறையில் இளம் வயதினர் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லது.

ஐபோன் மட்டுமே போதும்

ஸ்டெதஸ்கோப் வேணாம்..

டாக்டருக்கான பிரதான அடையாளம் வெள்ளை கோட் மற்றும் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். இந்த 2-வது அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இன்டர்நெட், இ-மெயில், பேக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட்

போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.





இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஸ்டெதஸ்கோப்பாக பயன்படும் ஐபோனுக்கு ஐ&ஸ்டெதஸ்கோப்’என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன், பல்வேறு வகைகளில் பயன்படுவதால் அதில் அதிக சக்தி வாய்ந்த கேமரா, சென்சார்கள், மைக் போன்ற கருவிகள் உள்ளன.



இவற்றை பயன்படுத்தியே நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கண்டறிய முடியும். ஐபோனை ஸ்டெதஸ்கோப்பாக பயன்படுத்துவதற்கான ‘டிரயல்’ சாப்ட்வேரை ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து இதுவரை 30 லட்சம் டாக்டர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். சாதாரண மக்களும் செல்போனை பயன்படுத்தியே இதயத்துடிப்பு பற்றி தெரிந்துகொள்வதற்கு ஏற்ப விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்கிறது ஆப்பிள் நிறுவனம்.



மருத்துவம் தொடர்பாக 6 ஆயிரம் பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் இப்போது பயன்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு டாக்டர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல் கூறுகின்றனர்.

கம்ப்யூட்டர் மெமரி

கம்ப்யூட்டர் மெமரி’க்கு உதவும் மரப் புரதம்!
கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றால் ஆச்சரியமாயில்லை? ஆம், `போப்லார்’ மரத்தில் இருந்து கிடைக்கும் புரத மூலக்கூறுகளையும், சிலிக்கா நானோ பார்ட்டிக்கிள்களால் ஆன மெமரி யூனிட்களையும் ஒன்று சேர்க்கும்போது, கம்ப்யூட்டர்களின் மெமரி திறன் பெருமளவு அதிகரிக்கிறது என்று ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



அவர்கள், கம்ப்யூட்டருக்கான `மெமரி’ பகுதியைக் குறைத்தும், அதன் திறனை அதிகரித்தும் காட்டியுள்ளனர். இது, இப்போதைய முறைக்கு மாற்றாக அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது மெமரி திறனை அதிகரிக்க முயலும்போது உற்பத்திச் செலவும் அதிகமாகிறது. சிலிக்கான் நானோ பார்ட்டிக்கிளுடன் `போப்லார்’ மரத்தின் புரதத்தைச் சேர்ப்பதற்கு ஜெருசலேம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மரபணுப் பொறியியலையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.



மெமரி திறனை அதிகரிப்பதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்று ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் டேன்னி போரத்தும், அவரது மாணவர் இஸார் மெடல்ஸியும் விளக்கிக் காட்டியுள்ளனர். இந்த வெற்றியானது, கம்ப்யூட்டர்களின் நடப்பு மெமரி அளவைக் கூட்டும் அதேநேரம், அது பிடித்துக்கொள்ளும் இடத்தை வெகுவாகக் குறைக்கும். எனவே இது வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2