காலையும் மதியமும் இளநீர் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி சக்தியுடன் செயலாற்றலாம். கல்லீரலைப் பாதுகாத்து நன்கு இயங்கவும் இதில் உள்ள ஸல்ஃபர் உப்பு உதவுகிறது. இதில் ஸல்ஃபர் உப்பு தாராளமாக இருப்பதால் இரத்தம் சுத்தமாவதுடன் தோலையும் சிவப்பாகவும் மாற்றிவிடுகிறது .
தான் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் கொண்டவர்கள், தினமும் இரண்டு இளநீரும், 200 மிலி தக்காளிச் சாறும் ஒருவேளை அருந்தி வந்தால் நிச்சயம் சிவப்பாக மாறிவிடுவர். தக்காளியில் உள்ள லைகோபென், தோல் சிவப்பாக மாறுவதைத் துரிதப்படுத்தும்.
எனவே, கறுப்பாக உள்ளவர்கள் சிவப்பாக மாறுவது எளிதே. எல்லாவற்றையும் விட, காலையில் அருந்தும் இளநீர் சிறுநீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சியம் சேமிப்பையும் மற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. இரத்தக்கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிமிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன.
இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகிறோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுக்கிறது. முதுமையிலும், இளமையான தோற்றத்தை நீடிக்கச் செய்ய இப்போது முதலே தினமும் இரண்டு இளநீரை அருந்தி வாருங்கள். இதனால் மருத்துவச் செலவுகளும் மிச்சப்பட்டு, ஆரோக்கியமான வாழ்வும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
Thursday, September 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment