இப்படி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்பம் என்று கருதக்கூடிய தாத்தக்களுக்கும் பாட்டிகளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுகம் செய்து வைப்பதை விட பெரிய சேவை வேறு இருக்க முடியாது தெரியுமா?
இண்டெர்நெட் அறிமுகம் வயதானவர்களுக்கு புதிய உலகை திறந்துவிடும் என்பது ஒருபுறம் இருக்க அது அவர்களின் மூளை செயல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதே விஷயம்.அதாவது இண்டெர்நெட்டில் தகவல்களை தேடுவது மூளைக்கான மிகச்சிறந்த பயிற்சியாக அமையும் என தெரிய வந்துள்ளது.
அதிகம் இல்லை ஒரு வார காலம் கூகுல் தேடலில் எடுபட்டாலே போதும் பெரியவர்களின் மூளை செயல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் மேம்படுபவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்சேர்ந்த யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது.55 வயது முதல் 78 வயதானவர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆலசி ஆராயப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோர் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது அவர்கள் மூலையில் நிகழும் ராசாயண மாறுதல்கள் கவனிக்கப்பட்டன.
அப்போது தேடலில் ஈடுபட்டவர்களின் மூளை செயல்பாடு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.முளையில் முடிவெடுக்க பயன்படும் பகுதியில் இந்த செயல்பாடு அமைந்திருந்ததை ஆய்வாலர்கள் கவனித்துள்ளனர்.
இந்த வகை செயல்பாடு முடிவெடுப்பது மற்றும் புரிந்து கொள்ளுதலில் முக்கிய பாங்காற்றும் என்று கருதப்படுகிறது.எனவே இண்டெர்நெட்டில் தகவல்களை தேடுவது மூளைக்கான பயிற்சியாக அமையும் என்று கருதப்படுகிறது.ஒரு வார காலம் தேடலில் ஈடுபட்டாலே போதுமானது என்றும் தெரிய வந்துள்ளது.
அல்சைமர்ஸ் போன்ற நினைவுத்திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைய தேடல் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment